பட்டம் யாருக்கு?.. உலகின் பார்வையை தன் பக்கம் திருப்பிய நிகழ்ச்சி

x

உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் போட்டிகள், பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் கோலாகலமாக தொடங்குகிறது.

ஆகஸ்ட் 11ம் தேதி வரை நடைபெறும் இந்த போட்டிகளில், 206 நாடுகளைச் சேர்ந்த 10,500 வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டு பதக்கவேட்டை நடத்த உள்ளனர்.

இந்தியாவில் இருந்து 117 வீரர், வீராங்கனைகள் 16 போட்டிகளில் களமிறங்குகின்றனர்.

ஒலிம்பிக் கால்பந்து தொடரின் முதல் போட்டியில், உலக சாம்பியன் அர்ஜென்டினா மொராக்கோவை எதிர்கொண்டது. ஆனால், மைதானத்திற்குள் ரசிகர்கள் அத்துமீறி நுழைந்த‌தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டதோடு, போட்டி ஒத்திவைக்கப்பட்டது.

தொடர்ந்து நடைபெற்ற ஆட்டத்தில், மொராக்கோவிடம் 2க்கு ஒன்று என்ற கோல் கணக்கில் அர்ஜெண்டினா அணி அதிர்ச்சி தோல்வி அடைந்த‌து.

மறுபுறம் மகளிர் வில்வித்தை போட்டியில், பஜன் கவுர், அங்கிதா பகத், தீபிகா குமாரி ஆகியோர் அடங்கிய இந்திய அணி நான்காம் இடம் பிடித்து காலிறுதிக்கு நேரடியாக தகுதி பெற்று அசத்தியுள்ளது.



Next Story

மேலும் செய்திகள்