நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளில் அதிகாரிகள் இனி இப்படித்தான் ஆஜராக வேண்டும்...| Supreme Court | India

x

அரசு தொடர்புடைய நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளில் அதிகாரிகள் ஆஜராவது தொடர்பாக நிலையான செயல்பாட்டு நடைமுறைகளை மத்திய அரசு அண்மையில் வகுத்தது.

அதில், நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளில் ஆஜராக அதிகாரிகளுக்கு உரிய அவகாசம் அளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும், வழக்குகளில் ஆஜராகும் அரசு அதிகாரிகளின் உடை, புறத்தோற்றம் கல்வி சமூக பின்னணி குறித்து நீதிமன்றங்கள் கருத்து தெரிவிப்பதை தவிர்க்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. இந்த விவகாரத்தை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், நீதிமன்ற அவமதிப்பு உள்ளிட்ட வழக்குகளில் அரசு அதிகாரிகள் ஆஜராவது தொடர்பான வழிகாட்டுதல்கள் உருவாக்கப்படும், நீதிமன்ற வழக்குகளில் ஆஜராகும் அரசு அதிகாரிகளின் உடை எவ்வாறு இருக்க வேண்டும் என்ற விஷயமும் அதில் இடம்பெறும் என்றும் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்