கடமையை செய்ய வந்த அதிகாரிகள்...கணவனுக்காக உயிர்விட துணிந்த மனைவி - நெஞ்சை பதற வைத்த செயல்

x

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே, அங்கன்வாடி கட்டிடத்தை சக்திவேல் என்பவர் ஆக்கிரமிப்பு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் வருவாய்த்துறை அதிகாரிகள் ஆக்கிரமிப்பை அகற்றும் பணியில் ஈடுபட்டபோது, சக்திவேலின் மனைவி சாவித்ரி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். தொடர்ந்து வீட்டிற்குள் சென்ற சாவித்ரி, மண்ணெண்ணெய் ஊற்றி உடலில் தீ வைத்துக் கொண்டார். உடனடியாக தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட சாவித்ரி, தஞ்சாவூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்