அதிகாரிகள் அதிரடி சோதனையில் சிக்கியது பேஸ்ட்..ஸ்கேன் செய்தால்.. - டிமிக்கி கொடுக்க நினைத்த நபர் கைது
மதுரை விமான நிலையத்தில் சுமார் 59 லட்ச ரூபாய் மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
மதுரை விமான நிலையத்திற்கு, சிங்கப்பூரிலிருந்து வரும் ஏர் இந்தியா விமானத்தில், தங்கம் கடத்தி வரப்படுவதாக தகவல் கிடைத்தது. அதன் பேரில், சிங்கப்பூரிலிருந்து வந்த விமான பயணிகளை சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது பயணி ஒருவர், பேஸ்ட் வடிவில், 995.4 கிராம் தங்கத்தை மறைத்து கடத்தி வந்தது தெரிய வந்தது. இதனையடுத்து, 59 லட்ச ரூபாய் மதிப்பிலான தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், அந்த பயணியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story