பிரபல் யூடியுபர் வீட்டில் NIA அதிகாரிகள் திடீர் ரெய்டு | NTK
தடை செய்யப்பட்ட விடுதலை புலிகள் இயக்கத்துடன் தொடர்பில் இருப்பதாக கூறி, சிவகங்கையில் யூடியுபர் ஒருவரது வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகேயுள்ள பகை வென்றான் கிராமத்தில், நாம் தமிழர் கட்சியின் நிர்வாகியும், யூடியுபருமான விஷ்னு பிரதாப் வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தினர். நாம் தமிழர் கட்சியின் செயல்பாடுகள் மற்றும் தமிழ் பற்றாளர்கள் குறித்து யூடியுப்பில் விஷ்னு பிரதாப், வீடியோ பதிவிட்டு வந்த நிலையில், அவருடைய வீட்டில் சோதனை நடத்தப்பட்டிருக்கிறது. தடை செய்யப்பட்ட விடுதலை புலிகள் இயக்கத்துடன் தொடர்பில் இருந்து, வெளிநாட்டில் இருந்து சட்டவிரோதமாக பணம் பெற்றதாக கிடைத்த அடிப்படையில் சோதனை நடத்தப்பட்டதாக தகவல் வெளியானது. அதிகாலை ஐந்து மணிக்கு தொடங்கி சுமார் ஐந்து மணி நேரம் நடத்தப்பட்ட சோதனையில், ஒரு செல்போன் மற்றும் பிரபாகரன் படத்துடன் கூடிய நான்கு புத்தகங்களை அதிகாரிகள் கைப்பற்றியதாக கூறப்படுகிறது.