ஆசை ஆசையாக நூடுல்ஸ் சாப்பிட்ட மகள் வாயில் நுரை தள்ளி உயிரை விட்ட சோகம்... கதறிய தாய், தந்தை

x

ஆசை ஆசையாக நூடுல்ஸ் சாப்பிட்ட மகள் வாயில் நுரை தள்ளி உயிரை விட்ட சோகம்...ஒன்றுமே புரியாமல் கதறிய தாய், தந்தை

ஆசையாக நூடுல்ஸ் சாப்பிட்ட ஒரு சிறுமியின் உயிரை அதே நூடுல்ஸ் பறித்த துயர சம்பவத்தின் பின்னணியை விவரிக்கிறது இந்த தொகுப்பு..

ஏராளமான தீமைகள் இருப்பதாக தொடர்ந்து மருத்துவர்களால் எச்சரிக்கப்பட்டு வந்தாலும் பெரும்பாலான குழந்தைகளின் ஃபேவரிட் உணவு லிஸ்டில் முதலிடத்தில் இருப்பது நூடுல்ஸ் தான்...

இப்படி நூடுல்ஸ் பிரியையாக இருந்த பள்ளி மாணவிக்கு நேர்ந்த சம்பவம் பெற்றோர்களை பதற வைத்திருக்கிறது

திருச்சி மாவட்டம் அரியமங்கலத்தைச் சேர்ந்தவர் ஜான் ஜூடி மெயில்ஸ்.. ரயில்வே துறையில் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். சமீபத்தில் பணியிட மாற்றம் காரணமாகத் திருச்சிக்கு குடும்பத்துடன் வந்து இருக்கிறார்.

இவரது மகள் ஸ்டெபி ஜாக்குலின் மெயில்ஸ் திருச்சியில் உள்ள தனியார் பள்ளியில் 11 ம் வகுப்பு படித்து வருகிறார்.

சிறுவயதில் இருந்தே ஸ்டெபி நூடுல்ஸ் பிரியையாக இருந்து வந்திருக்கிறார்.

சம்பவத்தன்று பெற்றோர் இருவரும் வெளியே சென்றிருந்த நிலையில் ஸ்டெபி ஆன்லைன் மூலமாக உணவை ஆர்டர் செய்து, சாப்பிட்டு இருக்கிறார்..

காலை அவரது அறையில் வாயில் நுரை தள்ளிய நிலையில் காணப்பட்ட மகளை பார்த்துப் பெற்றோர் அதிர்ச்சியடைந்து கதறியழுதுள்ளனர். இதனைத் தொடர்ந்து மகளை அடக்கம் செய்வதற்கான வேலையில் ஈடுபட்டனர்.

திடீரென இறுதிச் சடங்கிற்கான வேலைகளை நடைபெறுவதைக் கண்ட அக்கம்பக்கத்தினர் சந்தேகமடைந்து உடனடியாக போலீசாருக்கு தகவல் அளித்தனர். ஸ்டெபியின் உடல் அமரர் வாகனத்தில் ஏற்றப்பட்ட நிலையில், போலீசார் அதனைத் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது

இதனைத் தொடர்ந்து பெற்றோர்களிடம் பேச்சு வார்த்தை நடத்திய போலீசார் ஸ்டெபியின் உடலை பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பினர். பிரேதே பரிசோதனை முடிந்த நிலையில் ஸ்டெபியின் உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ளது

ஸ்டெபியின் உடல் பிரேத பரிசோதனை அறிக்கையில் தான் அவர் உயிரிழந்ததற்கான முழுமையான காரணம் தெரிய வரும் என்கின்றனர் போலீசார்.

குழந்தைகளின் எதிர்காலத்துக்காக அயராது உழைக்கும் பெற்றோர் அவர்களிடையே உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பொருட்கள் குறித்தும் தெளிவு படுத்த வேண்டும் என்பதற்கான கருத்தினை அழுத்தமாகப் பதிவு செய்து இருக்கின்றது ஸ்டெபியின் இழப்பு..


Next Story

மேலும் செய்திகள்