"கிரிவலப் பாதையில் அசைவ உணவகங்கள்" ஷாக் ஆன தமிழக ஆளுநர்
திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் அசைவ உணவகங்கள் செயல்படுவதற்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வருத்தம் தெரிவித்துள்ளார். திருவண்ணாமலை மாவட்டத்தில் 2 நாள்கள் சுற்றுப் பயணம் மேற்கொண்ட அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருவண்ணாமலை கோயில் அருகிலும், கிரிவல பாதையிலும் போதிய கழிவறைகள் இல்லாததை அறிந்தும், அசைவ உணவு விற்கும் உணவகங்களை பார்த்தும் வருத்தமடைந்ததாக கூறியுள்ளார். உணவு என்பது ஒருவரது தனிப்பட்ட விருப்பம் என்றாலும், கோடிக் கணக்கான பக்தர்களின் உணர்வுகளுக்கு நாம் மதிப்பளிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
Next Story