10 ஆண்டுகளாக சாலை வசதி இல்லை...டோலி கட்டி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட மூதாட்டி
தேனி மாவட்டம் குரங்கணி மலைவாழ் கிராமத்தில் இருந்து சுமார் 5 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது சென்ட்ரல் ஸ்டேஷன் குக்கிராமம்... இப்பகுதியில் வசிக்கும் வேளாங்கண்ணி என்ற 60 வயது மூதாட்டி கடந்த 1 வார காலமாக காலில் புண்ணுடன் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் அவதிப்பட்ட நிலையில், கொட்டும் மழையில் சென்ட்ரல் ஸ்டேஷனில் இருந்து குரங்கணி வரை புதர் மண்டிய ஒற்றையடி மலைப்பாதையில் டோலி கட்டி தூக்கி வரப்பட்டார்... அங்கிருந்து அவர் போடிநாயக்கனூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டார்... கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக இப்பகுதி மக்கள் சாலை வசதி ஏற்படுத்தித் தரக்கோரி போராடி வரும் நிலையில், எவ்வித அடிப்படை வசதிகளும் செய்து தரப்படவில்லை என மலைக்கிராம மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்
Next Story