NLC சுரங்க விரிவாக்க பணி எதிரொலி...அரசு பேருந்துகள் மீது கல்வீச்சு
நெய்வேலி என்.எல்.சி. சுரங்க விரிவாக்க பணிகளுக்காக வளையமாதேவி பகுதியில் கால்வாய் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், கடலூர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் பேருந்துகள் மீது மர்மநபர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தினர். 18 பேருந்துகள் சேதமடைந்த நிலையில், இரண்டாவது நாளாக நேற்றும் பேருந்துகள் மீது கல்வீச்சு சம்பவம் நடைபெற்றது. இதில் 3 அரசு பேருந்துகள் சேதமடைந்ததால், தொடர்ந்து இரண்டாவது நாளாக இரவுநேர பேருந்து சேவைகளை அரசு போக்குவரத்துக் கழகம் நிறுத்தியது. இதனால் ஏராளமான பயணிகள் பேருந்து நிலையத்தில் காத்திருந்த நிலையில், இன்று காலை 6 மணிக்கு கிராமப்புற பேருந்துகள் வழக்கம்போல் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Next Story