1360 பக்க குற்றப்பத்திரிகை... தமிழகத்தை பரபரப்பாகிய நிர்மலா தேவி வழக்கில் இன்று தீர்ப்பு

x

கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்தியதாக பேராசிரியை நிர்மலாதேவி தொடர்பான வழக்கில்

இன்று ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்க உள்ளது.

கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்து சென்றதாக அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி உள்ளிட்டோர் மீது 2018 ஏப்ரல் மாதம் வழக்கு பதியப்பட்டது.

அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரி நிர்வாகம் கொடுத்த புகாரில் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த வழக்கும் சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்ட நிலையில் மதுரை காமராசர் பல்கலைக்கழக உதவி பேராசிரியர் முருகன், ஆய்வு மாணவர் கருப்பசாமி உள்ளிட்டோரும் இதே வழக்கில் கைது செய்யப்பட்டதை அடுத்து, சிபிசிஐடி போலீசார் 1360 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். அனைத்து சாட்சிகளும் விசாரிக்கப்பட்ட நிலையில் இன்று ஸ்ரீவில்லிப்புத்தூர் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நீதிபதி பகவதி அம்மாள் தீர்ப்பு அளிக்க உள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்