பேராசிரியை நிர்மலா தேவிக்கு எதிரான வழக்கு இன்று தீர்ப்பு

x

அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரியில் பணியாற்றிய பேராசிரியை நிர்மலா தேவி, தவறான பாதைக்கு அழைத்ததாக கல்லூரி நிர்வாகத்தில் மாணவிகள் புகார் அளித்தனர். கல்லூரி நிர்வாகம் அலட்சியம் செய்த‌ நிலையில், நிர்மலா தேவி பேசிய போன் உரையாடல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, சிபிசிஐடி விசாரணைக்கு தமிழக அரசு உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து, கடந்த 2018ஆம் ஆண்டு நிர்மலா தேவி, அவருடன் சேர்ந்து குற்றத்தில் ஈடுபட்டதாக, மதுரை காமராசர் பல்கலைக்கழக உதவி பேராசிரியர் முருகன், ஆய்வு மாணவர் கருப்பசாமி கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கை விசாரித்த ஸ்ரீவில்லிப்புத்தூர் மகளிர் நீதிமன்றம், ஏப்ரல் 26ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என கூறியிருந்த‌து. அன்றைய தினம், நிர்மலாதேவி ஆஜராகாத‌தால், தீர்ப்பு 29ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. அதன்படி, இன்று இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. முதல் குற்றவாளியான நிர்மலா தேவி கட்டாயம் ஆஜராக வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளதால், மூன்று பேரும் ஆஜராவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்