9ம் வகுப்பு மாணவனை காவு வாங்கிய கண்ணுக்கு தெரியா அரக்கன் - உயிரை கையில் பிடித்து நடுங்கும் 330 பேர்

x

9ம் வகுப்பு மாணவனை காவு வாங்கிய கண்ணுக்கு தெரியா அரக்கன் - உயிரை கையில் பிடித்து நடுங்கும் 330 பேர்

கேரள மாநிலம் மலப்புரத்தில் நிபா வைரசால் உயிரிழந்த சிறுவனின் குடும்பத்தினருக்கு முதல்வர் பினராயி விஜயன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

மலப்புரம் மாவட்டத்தை சேர்ந்த 9-ம் வகுப்பு மாணவன் காய்ச்சல் காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு நிபா வைரஸ் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதால், கோழிக்கோடு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தனி வார்டில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில், திடீரென மாரடைப்பு ஏற்பட்டு சிறுவன் உயிரிழந்துள்ளார். அவரது குடும்பத்திற்கு முதல்வர் பினராயி விஜயன் இரங்கல் தெரிவித்துள்ளார். சிறுவனுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த 7 பேருக்கு நிபா பாதிப்பு இல்லை என தெரிய வந்துள்ளது. மேலும் தொடர்பு பட்டியலில் உள்ள 330 பேர் கண்காணிப்பில் உள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்தார். அதே நேரத்தில், உடனடியாக நிபா கட்டுப்பாட்டுக்காக 25 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. சிறப்பு காய்ச்சல் கிளினிக்குகள் தொடங்கப்பட்டுள்ளன.


Next Story

மேலும் செய்திகள்