மாணவர்களுக்கு மாலை, மரியாதை... வீடு வீடாக சென்று அசரவைத்த ஆசிரியர்கள்... உடன் சென்ற காந்தி, பாரதி
நீலகிரியில் உள்ள பழங்குடியின கிராமத்தில், அரசுப்பள்ளி ஆசிரியர்கள் பெற்றோருக்கு தாம்பூல தட்டு கொடுத்து மாணவர் சேர்க்கை குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
நீலகிரி மாவட்டம் மராடி எனும் பழங்குடியின கிராமத்தில், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்தும் நோக்கில், அப்பள்ளி ஆசிரியர்கள் நூதன முறையில் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். வெற்றிலை பாக்கு தாம்பூல தட்டுடன், வீடு வீடாக சென்று குழந்தைகளுக்கு மாலை அணிவித்தனர். அரசுப்பள்ளியில் உள்ள சலுகைகள் குறித்து பெற்றோருக்கு எடுத்துரைத்தனர். மேலும் முன்னாள் தலைவர்களின் முக கவசங்களை மாணவர்களுக்கு அணிவித்து ஊர்வலமாக அழைத்துச் சென்றனர். புதிய சேர்க்கைக்கு ஒத்துழைப்பு அளித்த பெற்றோருக்கு, அரசுப்பள்ளி சார்பில் நினைவுப்பரிசும் வழங்கப்பட்டது.
Next Story