பூர்வீக பூமியை விட்டு வெளியேற சொன்ன வனத்துறை.. டவர் மேல் ஏறிய இளைஞர் - நீலகிரியில் பரபரப்பு

x

புதிய யானைகள் வழித்தடத்தால் பொதுமக்களை வெளியேற்ற சதி நடப்பதாக கூறி இளைஞர் டவர் மீது ஏறி திடீர் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு நிலவியது... நீலகிரி கூடலூரை சுற்றி உள்ள பகுதிகளில் யானைகளின் நடமாட்டம் உள்ள நிலையில் கூடலூரைச் சேர்ந்த சில பகுதிகளையும் சேர்த்து 42 வழித்தடங்கள் என வனத்துறையினர் அரசாணை பிறப்பித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து பல தலைமுறைகளாக வாழ்ந்து வரும் தங்களை வெளியேற்றுவதற்காக சதி நடப்பதாக ஓவேலியைச் சேர்ந்த மணி வர்மா என்ற இளைஞர் கூடலூர் அருகே டவர் மீது எறி போராட்டம் நடத்தினார். அதிகாரிகள் குரலுக்கும் அவர் செவி சாய்க்காததால் பெரும் பரபரப்பு நிலவியது...


Next Story

மேலும் செய்திகள்