``சிக்கினால் சமாதி தான்''.... `அழிவை நோக்கி செல்லும் அபாயம்' - நீலகிரியில் போராடும் வனத்துறை
அழிந்து வரும் பட்டியலில் உள்ள அரிய வகை பூச்சி உண்ணும் தாவரத்தை காக்க போராடி வருகின்றனர் கூடலூர் வனத்துறையினர்... இதைப் பற்றிப் பார்க்கலாம் இந்த செய்தித் தொகுப்பில்..
பசிக்காக பூச்சிகள் தாவரத்தை உண்ணுவது இயல்பான ஒன்றுதான்..
ஆனால் தாவரங்கள் பூச்சிகளை உண்பதை நினைத்துப் பார்க்கையிலேயே கொஞ்சம் திகிலாகத் தானே உள்ளது?...
நீலகிரி நாடுகாணியில் அரிய வகை தாவரங்களைப் பாதுகாக்கும் ஜீன்பூல் தாவரவியல் மரபியல் பூங்காவில்... அழிந்து வரும் பட்டியலில் உள்ள தாவரங்களை வனத்துறையினர் பாதுகாத்து வருகின்றனர்...
அப்படி பூச்சி உண்ணும் தாவரங்களான Venus Flytrap...Cobra Lily...வரிசையில் உள்ளது தான் இந்த "Drosera indica" ...
பள்ளிப் பாடங்களில் இதைப் படித்திருப்போம்...ஆனால் பெரும்பாலானோர் கண்டிராத இந்தத் தாவரம் இங்கு கண்டறியப்பட்டுள்ளது...
சிறிய பூச்சிகள் இதன் கரங்களில் சிக்கினால் சமாதிதான்...
இங்கு 2 இடங்களில் "Drosera indica" கண்டுபிடிக்கப்பட்டுள்ளது...
பூமியிலிருந்து வெறும் 10 சென்டிமீட்டர் உயரம் தான் வளரும்...
இந்த அரிய வகை தாவரத்தில் தற்பொழுது பூக்களும் பூத்துள்ள நிலையில் அழிந்து விடாமல் கண்ணும் கருத்துமாக பாதுகாத்து வருகின்றனர் வனத்துறையினர்...