டிசம்பருக்கு வார்னிங் கொடுத்த ஜூலை - இந்த காட்சிகளை பார்த்து இப்பவே உடம்ப இரும்பாக்கிக்கோங்க மக்களே

x

நீலகிரி மாவட்டம் கூடலூர், பந்தலூர், தேவர் சோலை, நடுவட்டம், போன்ற பகுதிகளில் கடுமையான மழை பெய்து வருவதால் மரங்கள் சாய்ந்து சாலை போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. மேலும் மின்கம்பங்களில் மரங்கள் விழுந்துள்ளதால் 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் மூன்று நாட்களாக மின்சாரம் இல்லாமால் மக்கள் தவித்து வருகின்றனர். தாழ்வான பகுதிகளிலும் வெள்ளநீர் புகுந்துள்ளதால் மக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் முடங்கியுள்ளனர். தொடர்ந்து கூடலூர்-உதகை உதகை தேசிய நெடுஞ்சாலையில்ஆங்காங்கே மண்சரிவு ஏற்பட்டுள்ள சூழ்நிலையில் இயந்திரம் மூலம் தேசிய நெடுஞ்சாலை துறையினர் அதனை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்