சிறுவனை விழுங்கிய இயற்கை... தமிழக எல்லையில் 3 நாட்களாக 30 பேர் தேடுதல் வேட்டை

x

நீலகிரி மாவட்டம் பிதர்காடு பகுதியில் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட சிறுவனை தேடும் பணி 3வது நாளாக நடைபெற்று வருகிறது.

பிதர்காடு பகுதியைச் சேர்ந்த 2 சிறார்கள் வெள்ளேரி ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர். இதில் மரங்களின் வேருக்கு இடையே சிக்கிய இருந்த குணசேகரனின் உடல் மீட்கப்பட்டது. மற்றொரு சிறுவன் கவியரசனின் கதி தெரியாததால், 3வது நாளாக தேசிய பேரிடர் மீட்பு குழுவைச் சேர்ந்த 30 பேர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். ஸ்கூபா டைவிங் உபகரணங்கள் உதவியுடன் நீருக்கு அடியில் சென்று சிறுவனை தேடி வருகின்றனர். ஒருவேளை கேரளாவிற்கு அடித்து செல்லப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் கேரளா காவல்துறையினரும் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

நீலகிரி மாவட்டம், பிதற்காடு பகுதியில் வெள்ளேரி ஆற்றிற்கு மீன் பிடிக்க சென்று ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்த பள்ளி மாணவன் குணசேகரனின் உடலுக்கு எம்பி ராசா அஞ்சலி செலுத்தினார். அப்போது முதலமைச்சரின் நிவாரணத் தொகையான மூன்று லட்சம் ரூபாயும், மாவட்ட திமுக சார்பாக ஒரு லட்சம் ரூபாயும் குணசேகரனின் குடும்பத்தினருக்கு அவர் வழங்கினார்.


Next Story

மேலும் செய்திகள்