வாக்கு எண்ணும் மையத்தில் திடீரென ஆஃப்பான சிசிடிவி.. 20 நிமிடங்கள்.. நீலகிரியில் பரபரப்பு

x

நீலகிரி வாக்கு எண்ணும் மையத்தில், சிசிடிவி காட்சி திரை, திடீரென ஒளிபரப்பாகாததால், 20 நிமிடங்களில் தொழில்நுட்பக் கோளாறு உடனடியாக சரி செய்யப்பட்டது.

நீலகிரி மக்களவை தொகுதியில் பதிவான மின்னணு வாக்கு எந்திரங்கள், உகை அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் வைக்கப்பட்டு, பாலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அங்கு 180 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, போலீசார் கட்டுப்பாட்டு அறை மூலம் கண்காணித்து வருகின்றனர். இதேபோல் அரசியல் கட்சி வேட்பாளர்களின் முகவர்கள் வாக்கு எண்ணும் மையத்தில் தங்கி இருந்து ஓட்டுப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையின் சிசிடிவி காட்சிகளை டிவி மூலம் பார்வையிட்டு கண்காணித்து வருகின்றனர். இந்த நிலையில் சனிக்கிழமை மாலை முகவர்கள் அமரும் இடத்தில் கண்காணிப்பு கேமரா பதிவுகள் திடீரென டிவி திரையில் ஒளிபரப்பாகாமல் தடை ஏற்பட்டது. இது குறித்து உடனடியாக அங்குள்ள தொழில்நுட்பபிரிவு அலுவலர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் வந்து 20 நிமிடத்தில் சரி செய்தனர். பிறகு வழக்கம்போல் கண்காணிப்பு கேமரா பதிவுகள் திரையில் இயங்கியது.


Next Story

மேலும் செய்திகள்