நீலகிரியில் தொடர்ச்சியாக நடக்கும் சம்பவம்.. பீதியில் மக்கள்

x

நீலகிரியில் காப்பி தோட்டத்திற்கு பணிக்கு சென்ற பழங்குடியின தொழிலாளியைக் காட்டு யானை கடுமையாக தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது... ஓவேலி பேரூராட்சிக்குட்பட்ட மரப்பாலம், பாரதி நகர் பகுதியில் வசிக்கும் 45 வயது செம்பன் தர்மகிரி என்னும் இடத்தில் ஒரு தனியார் காப்பி தோட்டத்திற்கு வேலைக்கு சென்ற போது மறைந்திருந்த ஒற்றைக் காட்டு யானை செம்பனை கடுமையாக தாக்கியது... உடன் சென்றவர்கள் சத்தம் போட்டு யானையை விரட்டினர்... பலத்த காயங்களுடன் செம்பன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்... தொடர்ச்சியாக தொழிலாளர்களை யானை தாக்கி வருவதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்