சென்னையில் இலக்கை நிறைவு செய்த 'நீலகிரி' - வெளியான குட் நியூஸ்

x

சென்னையில் இலக்கை நிறைவு செய்த 'நீலகிரி' - வெளியான குட் நியூஸ்

சென்னை மெட்ரோ ரயிலின் இரண்டாம் கட்ட பணிகளில், 'நீலகிரி' என்ற முதல் சுரங்கம் தோண்டும் இயந்திரம், தனது இலக்கை இன்று நிறைவு செய்கிறது. சென்னையில் இரண்டாவது கட்டமாக 3 வழித்தடங்களில் 116 கிலோமீட்டர் தூரத்திற்கு மெட்ரோ பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் மாதவரம் பால் பண்ணை முதல் கெல்லிஸ் வரையில் 9 கிலோ மீட்டருக்கு 7 சுரங்கம் தோண்டும் இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகிறது. இதில் 1.4 கிலோமீட்டர் தொலைவிற்கு

முதல் சுரங்கம் தோண்டும் பணியினை, முதலமைச்சர் ஸ்டாலின் கடந்த ஆண்டு அக்டோபர் 13ம் தேதி தொடங்கி வைத்தார். அந்த சுரங்கம் தோண்டும் இயந்திரத்துக்கு நீலகிரி எனவும் பெயர் வைக்கப்பட்டது. இந்நிலையில் 9 மாதம் கழித்து இன்று மாலையுடன், நீலகிரி சுரங்கம் தோண்டும் இயந்திரம், தனது இலக்கை நிறைவு செய்கிறது.


Next Story

மேலும் செய்திகள்