கொண்டை ஊசி வளைவில் 5 மணி நேரம் ஸ்தம்பித்த போக்குவரத்து - டென்ஷனான மக்கள்

x

நீலகிரி மாவட்டத்தில் இருந்து கேரளா செல்லும் மலை பாதையின் கொண்டை ஊசி வளையில், பழுதாகி நின்ற லாரியால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது... கர்நாடகாவில் இருந்து கேரளாவிற்கு முறுக்கு மரங்களை ஏற்றிக் கொண்டு சென்ற லாரி, கீழ்நாடு காணி பகுதியில் இருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள குறுகிய கொண்டை ஊசி வளைவில் பழுதாகி நின்றது. இதனால், அப்பகுதியை மற்ற வாகனங்கள் கடந்து செல்ல முடியாத சூழல் உருவாகி கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, லாரியில் இருந்து மரங்களை இறக்கும் பணி நடைபெற்றது. இச்சம்பவத்தால் சுமார் 5 மணி நேரம் அப்பகுதியில் போக்குவரத்து தடைபட்டது.


Next Story

மேலும் செய்திகள்