"தவறான தகவல் கொடுத்த அதிகாரிகள்.. அரசு கடும் நடவடிக்கை எடுக்குமா?" - எழுந்த பரபரப்பு குற்றச்சாட்டு

x

நீலகிரி மாவட்டத்தில் யானைகள் வழித்தட விவகாரத்தில், தவறான தகவல்களை வனத்துறையினர் தெரிவிப்பதாக, மசினகுடி பகுதி வாழ்வுரிமை இயக்கங்களின் தலைவர் வர்கீஷ் குற்றம் சாட்டியுள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், யானை வழித்தடத்தில், உள்ள 38 விடுதிகள், தனியார் வன பாதுகாப்பு சட்டப்படி, விதி மீறிய கட்ட‌டங்கள் எனக்கூறி, இடிக்க நோட்டீஸ் ஒட்டியது தவறு என்றார். வனத்துறை அதிகாரிகளும், வனத்துறை சார்பாக ஆஜரான வழக்கறிஞர்களும் அரசாணைகளை மறைத்து, தவறான தகவல்களை நீதிமன்றத்திற்கு அளித்துள்ளதாக குற்றம் சாட்டிய அவர், அவர்கள் மீது உச்சநீதிமன்றமும், தமிழக அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்