தமிழக Ex டிஜிபி பெயரில் ராஜஸ்தான் இளைஞர்கள் செய்த காரியம்..

x

முன்னாள் டிஜிபி பெயரில் போலியாக குறுஞ்செய்தி அனுப்பி பண மோசடி செய்ய முயன்ற இரு வடமாநில இளைஞர்களை, நீலகிரி சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.

நீலகிரி மாவட்டத்தில் பணியாற்றிய முன்னாள் காவல் துறை உயர் அதிகாரி ஒருவருக்கு, முகநூல் மெசஞ்சர் மூலம், தமிழக முன்னாள் போலீஸ் டிஜிபி பெயரில் குறுஞ்செய்தி வந்தது. அதில் CRPF கமாண்டர் ஒருவர், சென்னையில் இருந்து ஜம்மு காஷ்மீருக்கு இட மாறுதலில் செல்வதாகவும், அவரிடம் உள்ள வீட்டு உபயோக பொருட்களை மிகக்குறைந்த விலைக்கு விற்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்பட்டது. இதுகுறித்து தனது உறவினர் முரளி என்பவருக்கு தகவல் தெரிவித்ததை அடுத்து, அவர் சிஆர்பிஎப் கமாண்டரை தொடர்பு கொண்டபோது,

வாட்ஸ் அப் மூலம் வங்கி கணக்கு விவரங்களை அனுப்பி உடனடியாக பணம் அனுப்ப தொடர்ந்து குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார். இதனால் சந்தேகமடைந்த முரளி, இதுகுறித்து நீலகிரி சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். இதன்பேரில் போலீசார் நடத்திய விசாரணையில், மோசடியில் ஈடுபட்டது ராஜஸ்தானை சேர்ந்த வாலக்கா மற்றும் சோகேல் ஆகிய இருவர் என்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார், ராஜஸ்தான் சென்று இருவரையும் கைது செய்து, நீலகிரி அழைத்து வந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்