அத்துமீறிய தம்பதி... ஆக்ரோஷமாக யானைகள் சேர்ந்து செய்த செயல்

x

நீலகிரி மாவட்டத்தில் உணவைத் தேடி சாலையை யானைக்கூட்டம் கடக்க முயன்ற நிலையில், அதனை கண்டுகொள்ளாமல் இருசக்கர வாகனத்தை இயக்கிய தம்பதியர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். சிங்காரா கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள், குட்டிகளுடன் யானைகள் உணவிற்காக சாலையை கடந்ததை கண்டு, வாகனத்தை நிறுத்தி காத்திருந்தனர். அப்போது, ஒரு தம்பதியர் யானைகளை பற்றி கண்டுகொள்ளாமல், இருசக்கர வாகனத்தை இயக்கி அத்துமீறி சென்றதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த யானைகள், ஆக்ரோஷத்துடன் சத்தமிட்டவாறு சாலையை கடந்தன. இந்தக் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்