துப்பாக்கிகளுடன் மளிகை கடைக்காரர் வீட்டில் NIA அதிகாரிகள் சோதனை - ராமேஸ்வரத்தில் பரபரப்பு

x

ராமேஸ்வரம் அருகே, தடை செய்யப்பட்ட அமைப்புகளுடன் தொடர்பில் இருந்ததாக கூறப்படுவது குறித்து, இளைஞர் ஒருவரது வீட்டில், தேசிய புலனாய்வு அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

ராமேஸ்வரம் அடுத்த தங்கச்சிமடம் தர்கா பகுதியைச் சேர்ந்த செய்யது யூசுப் என்பவர், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் சவூதி அரேபியாவில் பணியாற்றினார். பின்னர் சொந்த ஊர் திரும்பி, தங்கச்சிமடத்தில் மளிகைக் கடை நடத்தி வருகிறார். இவர், இந்தியாவில் தடை செய்யப்பட்ட அமைப்புகளுடன் தொடர்பில் இருந்ததாக கூறப்படுகிறது. இதன் அடிப்படையில், மதுரையிலிருந்து 4 பேர் கொண்ட என்.ஐ.ஏ. குழுவினர், தங்கச்சிமடத்தில் உள்ள செய்யது யூசுப் வீட்டில் சோதனை நடத்தினர். இதற்காக துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். வீட்டின் கதவை பூட்டிக்கொண்டு 3 மணி நேரமாக, அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதையடுத்து, செய்யது யூசுப்பை சென்னையில் உள்ள என்.ஐ.ஏ. அலுவலகத்தில் நேரில் விசாரணைக்கு ஆஜராக உத்தரவிட்டதாக கூறப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்