NIA போட்ட அதிரடி உத்தரவு - 1500 வீடியோக்களோடு நேரில் வந்த சாட்டை துரைமுருகன்

x

தடை செய்யப்பட்ட விடுதலை புலிகள் இயக்கத்துடன் தொடர்பில் இருந்தது மற்றும் கடந்தாண்டு நாட்டுத் துப்பாக்கிகள் தயாரித்து இரு இளைஞர்கள் சேலத்தில் கைது செய்யப்பட்டது குறித்தும் கடந்த சில நாட்களுக்கு முன் நாம் தமிழர் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் வீட்டில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில், சாட்டை துரைமுருகன், இசை மதிவாணன், இடும்பாவனம் கார்த்திக் உள்ளிட்டோர் சம்மன் அடிப்படையில் சென்னையில் உள்ள என்.ஐ.ஏ அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகியிருந்ததும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், நாம் தமிழர் கட்சி நிர்வாகியும், யூடியுபரான சாட்டை துரைமுருகனிடம், அவர் இதுவரை யூடியுப்பில் பதிவேற்றம் செய்த அனைத்து வீடியோக்களையும் சமர்பிக்க கோரி என்.ஐ.ஏ அதிகாரிகள் உத்தரவிட்டனர். இதனடிப்படையில், நேரில் ஆஜரான சாட்டை துரைமுருகன், தான் யூடியுப்பில் பதிவேற்றம் செய்த 1500 வீடியோக்கள் கொண்ட ஹார்டு டிஸ்க்கை என்.ஐ.ஏ அதிகாரிகளிடம் சமர்பித்தார்.


Next Story

மேலும் செய்திகள்