கள்ள நோட்டு விவகாரம் - NIA ஐ லெப்ட் ரைட் வாங்கிய ஐகோர்ட்

x

கள்ள ரூபாய் நோட்டு தொடர்பான யுஏபிஏ வழக்கின் புலன் விசாரணையை 4 ஆண்டுகள் தாமதப்படுத்தியதற்கு

உச்சநீதிமன்றம் என்ஐஏவை கடிந்து கொண்டது.

கடந்த 2020-ஆம் ஆண்டு பாகிஸ்தானில் அச்சடிக்கப்பட்ட

கள்ள நோட்டுக்களை வைத்திருந்ததாக ஜாவீத் குலாம்

ஷேக் என்பவரை என்ஐஏ கைது செய்தது. ஜாவீத் குலாம்

தரப்பில் தாக்கல் செய்யபட்ட மேல்முறையீட்டு வழக்கை

விசாரித்த உச்சநீதிமன்றம், மனுதாரர் தீவிரமான

குற்றச்சாட்டுக்கு உள்ளாகி இருந்தாலும் விரைவான விசாரணைக்கு உரிமை படைத்தவர் என்று கூறியது .

புலன் விசாரணையை 4 ஆண்டுகள் தாமதப்படுத்தியதற்கு

என்ஐஏவை கடிந்து கொண்ட உச்சநீதிமன்றம் நீதியை

கேலி செய்ய வேண்டாம் என கருத்து தெரிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்