சென்னையில் பரபரப்பு கிளப்பிய பாலஸ்தீன அமைப்பு.. ஆறு பேரிடம் என்ஐஏ விசாரணை
தடைசெய்யப்பட்ட அமைப்புடன் தொடர்பில் இருந்து கைதான ஆறு பேரையும், என்.ஐ.ஏ அதிகாரிகள் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தடை செய்யப்பட்ட ஹிஸ்புத் தஹீரிர் அமைப்புடன் தொடர்பில் இருந்து, அமைப்புக்கு ஆள் சேர்த்த புகாரில் சென்னையில், 6பேர் கைது செய்யப்பட்டனர். ராயப்பேட்டையைச் சேர்ந்த டாக்டர் ஹமீது உசேன், அவரது தந்தை மன்சூர், சகோதரர் அப்துல் ரகுமான் என கடந்த மே மாதம் ஆறு பேர் கைது செய்யப்பட்ட நிலையில், வழக்கு தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றப்பட்டது. யூடியூப் சேனல் மூலம் அமைப்புக்கு ஆதரவான கருத்துகளை இந்த விவகாரத்தில் கும்பல் பரப்பி வந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், தீவிர விசாரணை நடத்தி வந்த என்.ஐ.ஏ அதிகாரிகள், சென்னை பூந்தமல்லி சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஆறு பேரையும், ஆறு நாள்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.