சூர போதையில் வந்த நபர்... பைக்கை பறிமுதல் செய்த போலீசார்... காலையில் சடலமாக கிடந்ததால் அதிர்ந்த ஊர்... அந்த இரவில் அரங்கேறிய கொடூரம்
கடலூர் மாவட்டம் நெய்வேலி அருகே போலீசார் வாகனத்தை பிடுங்கியதால் இளைஞர் உயிரிழந்ததாக கூறி, உறவினர்கள் மறியலில் ஈடுபட்ட நிலையில், அவர் விபத்தில் உயிரிழந்தது அம்பலமானது.
நெய்வேலி டவுன்ஷிப் போலீசார் சனிக்கிழமையன்று,
இரவு வாகன தணிக்கையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது, பைக்கில் வந்த வாலிபர் ஒருவர் மது போதையில் வந்ததால் அவரிடம் வாகனத்தை பறிமுதல் செய்து, காலையில் வருமாறு சொல்லி அனுப்பினர். அதன் பிறகு அதிகாலையில் அந்த வாலிபர் சாலையில் உயிரிழந்து கிடந்தார்.
இதனை விசாரித்த போலீசார் அவர் கீழகொள்ளை பகுதியை சேர்ந்த ராஜ்குமார் என்பதை கண்டுபிடித்து அவரது வீட்டிற்கு போன் செய்தனர். உறவினர்கள் மற்றும் அந்த ஊரை சேர்ந்தவர்கள் வந்து பார்த்துவிட்டு, வாகனத்தை பிடுங்கி வைத்ததால் தான் அவர் உயிரிழந்ததாக கூறி சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த நிலையில் சாலையில் உள்ள சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது, ராஜ்குமார் கார் மோதி உயிரிழந்ததும், அந்த காரை ஓட்டியவரையும் போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். இதனால் கடந்த 2 நாட்களாக நடைபெற்ற போராட்டம் முடிவுக்கு வந்தது.