தேவாலயத்தில் புத்தாண்டு கொண்டாட்டம் வீட்டில் கைவரிசை காட்டிய மர்ம நபர்கள் போலீசார் வலைவீச்சு
நெல்லையில், பஞ்சாயத்து துணைத் தலைவர் வீட்டின் பூட்டை உடைத்து, 15 சவரன் தங்க நகை மற்றும் இரண்டரை லட்சம் ரூபாய் பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர். பொன்னாக்குடி பகுதியை பஞ்சாயத்து துணைத் தலைவராக உள்ள செல்லத்துரை என்பவர், புத்தாண்டை யொட்டி, குடும்பத்துடன் தேவாலயத்திற்கு சென்றபோது இந்த கொள்ளை சம்பவம் அரங்கேறியுள்ளது. இதுதொடர்பான புகாரின் பேரில், போலீசார் விசாரணை மேற்காண்டு வருகின்றனர்
Next Story