டிச., 1 முதல் பத்திரப்பதிவுக்கு புதிய நடைமுறை... என்னென்ன மாற்றங்கள்..? வெளியான தகவல்

x
  • அடுக்குமாடி குடியிருப்பின் கட்ட‌டம் மற்றும் அடிநிலம் சேர்ந்த கூட்டு மதிப்பின் அடிப்படையில் ஒரே விற்பனை ஆவணமாகப் பதிவு செய்யும் புதிய நடைமுறையும், முத்திரை தீர்வை குறைப்பும் தமிழக‌ அரசு அறிவித்துள்ளது.
  • அதன்படி, 50 லட்சம் ரூபாய் வரையுள்ள அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான முத்திரைத் தீர்வையை, தற்போது உள்ள 7% லிருந்து 4% ஆக குறைக்கலாம் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
  • 50 லட்சம் முதல் 3 கோடி ரூபாய் வரையிலான அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான முத்திரைத் தீர்வையை, 7% லிருந்து 5% ஆக குறைக்கப்பட உள்ளது.
  • இதனால், 50 இலட்சம் ரூபாய் வரை மதிப்புடைய புதிய அடுக்குமாடி குடியிருப்புகளை வாங்குவோர், விற்பனைக் கிரைய ஆவணம் பதியும்போது முத்திரைத் தீர்வை 4% மற்றும் பதிவுக் கட்டணம் 2% செலுத்தினால் போதுமானதாகும்.
  • 50 லட்சம் முதல் 3 கோடி ரூபாய் வரையிலான மதிப்புடைய அடுக்குமாடி குடியிருப்புகளை வாங்குவோர் முத்திரைத் தீர்வை 5% மற்றும் பதிவுக் கட்டணம் 2%ஆக மொத்தம் 7% செலுத்தினால் போதுமானதாகும்.
  • இந்த புதிய நடைமுறை வரும் டிசம்பர் ஒன்று முதல் நடைமுறைக்கு வரும் என்றும், அடுக்குமாடி குடியிறுப்புகளின் முதல் விற்பனைக்கு மட்டுமே... மறு விற்பனைக்கு பொருந்தாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



Next Story

மேலும் செய்திகள்