CBSC-7ஆம் வகுப்பில் புதிய பாடம்...தேச பக்தியை வளர்க்க முயற்சி | India | CBSC | School Students
NCERT எனப்படும் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்குழு பாடத்திட்டத்தில், இந்த ஆண்டுமுதல் 7-ம் வகுப்பு பாடத்தில் தேசிய போர் நினைவிடம் - 'நமது துணிச்சலான வீரர்களுக்கு மரியாதை' என்ற அத்தியாயம் சேர்க்கப்பட்டுள்ளது. பள்ளி மாணவர்களிடையே தேசபக்தி, கடமையுணர்வு, துணிச்சல், தியாகம் போன்ற அம்சங்களை வளர்க்கவும், தேசத்தை கட்டியெழுப்புவதில் இளைஞர்களின் பங்களிப்பை அதிகரிக்கச் செய்யவும், பாதுகாப்பு மற்றும் கல்வி அமைச்ககம் இணைந்து இந்த முயற்சியை முன்னெடுத்துள்ளது. தேசிய போர் நினைவிடத்தின் வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கருத்தை எடுத்துக்காட்டும் விதமாக பாடத்திட்டத்தில் அமைந்துள்ளது.
Next Story