நியோமேக்ஸ் நிதி நிறுவன மோசடி வழக்கு - கைதான நேரத்திலேயே முன்ஜாமின் கோரி மனு

x

நியோமேக்ஸ்' நிதி நிறுவன மோசடி வழக்கில், பங்குதாரர்களின் முன் ஜாமின் மனு மீதான விசாரணையை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை ஒத்தி வைத்துள்ளது. மோசடி புகாரில், மதுரை தலைமையாக கொண்டு செயல்பட்ட 'நியோமேக்ஸ்' நிறுவனத்தை சேர்ந்த சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதே நேரத்தில் பங்குதார‌ர்கள் சிலர் முன்ஜாமின் கோரி மனு உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு மீண்டும் விசாரணைக்கு வந்த போது, புகார் எதுவும் கொடுக்காமல் சிலர் இடையீட்டு மனு தாக்கல் செய்துள்ளது ஏற்புடையது அல்ல என்ற நியோமேக்ஸ் தரப்பு வழக்கறிஞர், பதில் அளிக்க அவகாசம் கோரினார். அரசு வழக்கறிஞரும் அவகாசம் கோரியதால், விசாரணையை நீதிபதி ஒத்தி வைத்தார்.


Next Story

மேலும் செய்திகள்