வாழை படத்தின் ஒரிஜினல் ஹீரோயின் - கொடுத்த வாக்கை காப்பாற்றிய மாரிசெல்வராஜ்

x

நெல்லை அருகே 1999ஆம் ஆண்டு வாழை லோடு ஏற்றிய லாரி கவிழ்ந்த விபத்தில், கால்களை இழந்த பனிமாதா என்ற பெண்ணுக்கு, இயக்குனர் மாரிசெல்வராஜ், மாற்றுத்திறனாளி ஸ்கூட்டர் வாங்கிக் கொடுத்துள்ளார். ஸ்ரீவைகுண்டம் பகுதியில் உள்ள நாட்டார்குளத்தை சேர்ந்த பனிமாதா, கடந்த 1999ம் ஆண்டு நடந்த லாரி விபத்தில் கால்களை இழந்தார். சமீபத்தில், இயக்குநர் மாரிசெல்வராஜின் இயக்கத்தில் வெளியான வாழை திரைப்படமானது, இந்த விபத்து சம்பவத்தை மையமாக கொண்டு எடுக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், கால்களை இழந்த பனிமாதாவிற்கு நான்கு சக்கர ஸ்கூட்டி ஒன்றை, வாங்கி தந்துள்ளார் இயக்குநர் மாரிசெல்வராஜ். அரசிடம் பல முறை மனு கொடுத்தும் தன் கோரிக்கை நிறைவேறாத நிலையில், மாரிசெல்வராஜ் தனது கோரிக்கையை நிறைவேற்றியிருப்பதாக பனிமாதா நன்றி தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்