சொரிமுத்து அய்யனார் கோயில் திருவிழா...வெளியான அதிரடி அறிவிப்புகள் - எச்சரிக்கை..!

x

சொரிமுத்து அய்யனார் கோயில் திருவிழா...வெளியான அதிரடி அறிவிப்புகள் - எச்சரிக்கை..!

நெல்லை மாவட்டம், அம்பை அருகே பிரசித்தி பெற்ற காரையார் சொரிமுத்து அய்யனார் கோயில் திருவிழாவை முன்னிட்டு, சேரன்மகாதேவி சார் ஆட்சியரும், திருவிழா கண்காணிப்பு அலுவலருமான அர்பித் ஜெயின் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.காரையார் சொரிமுத்து அய்யனார் கோவில் திருவிழாவை முன்னிட்டு வரும் 31 -ந் தேதி முதல் ஆகஸ்ட் 8-ஆம் தேதி வரை மணிமுத்தாறு அருவி, அகஸ்தியர் அருவி, மாஞ்சோலை பகுதிகளுக்கு சுற்றுலா செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.முன்னேற்பாடுகள் மற்றும் தூய்மைப் பணிகள் காரணமாக ஜூலை 31, ஆகஸ்ட் 1, ஆகிய இரு நாட்கள், பாபநாசம் அகஸ்தியர் அருவி, காரையார் உள்ளிட்ட பகுதிகளுக்கு எவ்வித வாகனங்களுக்கும் அனுமதி கிடையாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.கோவிலுக்கு சொந்தமான இடத்தில் கோவில் நிர்வாகத்திடம் அனுமதி பெற்று பக்தர்கள் குடில்கள் அமைக்கலாம் என்றும், தடை செய்யப்பட்ட வனப்பகுதிக்குள் குடில்கள் அமைக்கவோ, தங்கவோ அனுமதி இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.தனிநபர் இடங்களை ஆக்கிரமித்து குடில்கள் அமைத்து, பக்தர்களிடம் அதிக தொகை கேட்டு புகார்கள் வரப்பெற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பாபநாசம் வனச்சோதனை சாவடியில் ஆகஸ்ட் 2 முதல் 5-ஆம் தேதி வரை தனியார் வாகனங்களுக்கு தடை விதிக்கப்படுவதால், பக்தர்கள் பொதுப் போக்குவரத்து மற்றும் அரசு பேருந்தில் மட்டுமே செல்ல வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்