வராத திமுக கவுன்சிலர்கள்..1 மணி நேரம் காத்திருந்த மேயர் - நெல்லையில் பரபரப்பு
வராத திமுக கவுன்சிலர்கள்..1 மணி நேரம் காத்திருந்த மேயர் - நெல்லையில் பரபரப்பு
நெல்லையில் மாமன்ற கூட்டம் நடைபெறாததால், பணிகள் பாதிக்கப்படுவதாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.நெல்லையில் நடைபெற்ற மாமன்ற கூட்டத்தில், சுமார் 10 கவுன்சிலர்கள் மட்டுமே பங்கேற்றனர். கூட்டத்திற்கு மேயர் சரவணன் வருகை தந்து ஒரு மணி நேரம் காத்திருந்த நிலையில், திமுக உறுப்பினர்களே கூட்டத்திற்கு வராததால், கூட்டம் ஒத்தி வைக்கப்படுவதாக அவர் அறிவித்தார். வேறொரு தேதியில் கூட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், மக்கள் பணிகள் வெகுவாக பாதிக்கப்படுவதாக அதிமுக உறுப்பினர்கள் குற்றச்சாட்டு தெரிவித்தனர்.
Next Story