நெல்லையில் இதுவரை நடக்காத ஒரு சம்பவம்.. மணப்பெண் வீட்டார் வெறிச்செயல்

x

நெல்லையில், சாதி மறுப்பு திருமணம் செய்த பெண்ணின் வீட்டார், மார்க்சிஸ் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லை பெருமாள்புரத்தைச் சேர்ந்த இளம்பெண் உதயதட்சாயிணியும், பாளையங்கோட்டை பகுதியைச் சேர்ந்த இளைஞர் மதன்குமாரும் காதலித்து வந்தாக தெரிகிறது. இருவேறு சமூகங்களைச் சேர்ந்த இவர்கள், வீட்டிலிருந்து வெளியேறி, ரெட்டியார்பட்டியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் தஞ்சமடைந்தனர். பின்னர், அங்கேயே மாலை மாற்றி திருமணம் செய்துகொண்டனர். தகவலறிந்து அங்கு வந்த பெண்ணின் வீட்டார், தட்சாயிணியை தங்களுடன் அனுப்புமாறு கேட்டதாக தெரிகிறது. தட்சாயிணி அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். இதன் காரணமாக, பெண் வீட்டாருக்கும், கம்யூனிஸ்ட் கட்சியினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது, பெண் வீட்டார். கட்சி அலுவலகம் மீது தாக்குதல் நடத்தியதாக தெரிகிறது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், பெண்ணின் பெற்றோர் உள்ளிட்ட 8 பேரை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள மேலும் சிலரை தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்