சந்தோஷமாக வேலைக்கு சென்று பிணமாக வீடு திரும்பிய அரசு ஊழியர் ..கோரத்தை நேரில் பார்த்து கதறிய மக்கள்

x

சந்தோஷமாக வேலைக்கு சென்று பிணமாக வீடு திரும்பிய அரசு ஊழியர் ..கோரத்தை நேரில் பார்த்து கதறிய மக்கள்

நெல்லையில் சாலையில் சண்டையிட்டு ஓடிய மாடுகள், இருசக்கர வாகனம் மோதியதில் நீதிமன்ற ஊழியர் பேருந்தின் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்திய நிகழ்வுகளால், எறுமை மாடுகள் மட்டுமல்ல, ஒட்டுமொத்த மாடுகளுமே எம தர்மராஜாவின் வாகனமாக மாறிவிட்டதோ என்று எண்ணத்தோன்றுகிறது....

பணியாளராக வேலை செய்யும் வேலாயுதராஜுக்கும் காலனாக மாறிவிட்டது கால்நடைகள்...

வழக்கம்போல் பணிக்கு புறப்பட்டவர் அன்று பிணமாகக் தான் வீடு திரும்பினார்.

பல முறை அறிவுறுத்தியும்...பல சமயங்களில் பல உயிர்கள் பறிபோக காரணமாகியும்... இன்னும் சாலைகளில் உலாவும் கால்நடைகளால் ஏற்படும் மரணங்களை தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றன...

விபத்து நடந்த அன்று இரண்டு மாடுகள் சண்டையிட்டு சாலையின் குறுக்கே ஓடியதில் அநியாயமாக அங்கு ஒரு உயிர் பறிபோனது.

மாடுகள் இருசக்கர வாகனத்தில் மோதியதால் நிலை குலைந்த வேலாயுதராஜ் சாலையில் நிலைத்தடுமாறி கீழே விழுந்தார்... அப்போது எதிரே வந்த அரசு பேருந்து அவர் மீது பயங்கரமாக மோதியது.

கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்துமுடிந்த இந்த சம்பவத்தில் வேலாயுதராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதற்கிடையே, வண்ணார்பேட்டை தெற்கு புறவழிச்சாலையில் 4 வழிச்சாலை பணி நடைபெறுவதால் போக்குவரத்து ஒரு வழி பாதையில் திருப்பி விடப்பட்டிருப்பதால் அங்கு அடிக்கடி விபத்துக்கள் நடந்துவருவதாகவும் குற்றம் சாட்டுகின்றனர், பொதுமக்கள்.

மேலும், விபத்துகளை தடுக்க, நான்கு வழிச்சாலை பணியை விரைவில் முடிக்க வேண்டும் எனவும் வலியுறுத்துகின்றனர், பொது மக்கள்.


Next Story

மேலும் செய்திகள்