அரசுப் பேருந்து ஓட்டுநர்-நடத்துநர் மீது தாக்குதல் - பாஜக பிரமுகர் மீது பாய்ந்தது குண்டாஸ்

x

பேருந்தில் பாஜக சின்னத்தை ஒட்ட முயன்று ஓட்டுநர் நடத்துனருடன் தகராறில் ஈடுபட்டதோடு அவர்களை தாக்கிய பாஜக பிரமுகர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. நெல்லை திம்மா புரத்தைச் சேர்ந்த மருதுபாண்டி பாஜக சின்னத்தை அரசுப் பேருந்தில் ஒட்ட முயன்றதுடன், ஓட்டுநர் நடத்துநரை மிரட்டி சோடா பாட்டிலால் தாக்கிய நிலையில், அவர் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் அவர் வெளியில் வந்தால் அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கலாம் என கருதி அவர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்