சாவுக்கு நிகரான தண்டனை கொடுத்த ஜட்ஜ்.. சிரித்து கொண்டே ஜாலியாக சென்ற 6 பேர். "பயமுறுத்தும் சிரிப்பு"

x

நெல்லை அருகே உள்ள தாழையூத்தின் பஞ்சாயத்துத் தலைவராக கிருஷ்ணவேணி என்பவர் கடந்த 2011ம் செயல்பட்டு வந்தார். பஞ்சாயத்துச் சார்பில் சுகாதார வளாகம் கட்டுவது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் சுப்பிரமணியன், சுல்தான் மைதீன் உள்ளிட்ட 9 பேர் கொண்ட கும்பல் கிருஷ்ணவேணியைச் சரமாரியாக வெட்டினர்.

இதில் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கிருஷ்ணவேணி உயிர் பிழைத்தார். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார் சுப்பிரமணியன் உட்பட 9 பேரைக் கைது செய்தனர். வழக்கு விசாரணை மாவட்ட வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. அதன் படி சுப்பிரமணியன், சுல்தான் மைதீன், கார்த்திக், பிரவீன்ராஜ், ஜேக்கப், விஜயராமமூர்த்தி ஆகியோருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் தொடர்புடைய ஒருவர் விசாரணையின் போது உயிரிழந்ததும், இருவர் விடுதலை செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்