அணையிலிருந்து உபரி நீர் குறைப்பு..படிப்படியாக வடியும் வெள்ள நீர்

x

மணிமுத்தாறு, காரையார் உள்ளிட்ட அணைகளில் உபரி நீர் வெளியேற்றம் குறைக்கப்பட்டு இருப்பதால் வெள்ளப்பெருக்கு படிப்படியாக குறைய தொடங்கி உள்ளது.

தென் மாவட்டங்களில் கொட்டித் தீர்த்த கனமழையால் மணிமுத்தாறு, காரையார், சேர்வலாறு அணைகளில் தண்ணீர் அதிக அளவு வெளியேற்றப்பட்டது. இதனால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இந்நிலையில், இந்த 3 அணைகளில் இருந்து தற்போது குறைவாக உபரி நீர் வெளியேற்றப்படுகிறது. இதனால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு படிப்படியாக குறைந்து வருகிறது. இதனால், சில இடங்களில் வெள்ள நீரும் வடியத் தொடங்கிவிட்டது...


Next Story

மேலும் செய்திகள்