வெள்ளக்காடாய் மாறிய விவசாய நிலங்கள்..ஏரிகள், குளங்கள் உடைந்து பெருக்கெடுத்த வெள்ளநீர்..
திருச்செந்தூர் சுற்றியுள்ள குளங்கள் முழுவதும் உடைந்து திருச்செந்தூரில் இருந்து திருநெல்வேலி செல்லும் சாலையிலும், திருச்செந்தூரில் இருந்து நாகர்கோவில் கன்னியாகுமரிக்கு செல்லும் சாலை முழுவதும் தண்ணீரால் சூழ்ந்துள்ளது. திருச்செந்தூர் ஆவுடையார் குளம் நிரம்பி உடைந்து அதிகப்படியான தண்ணீர் பெருக்கெடுத்துள்ளது. தெப்பக்குளமும் நிறைந்து தண்ணீர் கரைபுரண்டோடுகிறது. எல்லப்ப நாயக்கன்குளம், பள்ளிப்பத்து, நத்தகுளம் நாலாயிரமுடையார் குளம், கானம்குளம் உள்ளிட்ட குளங்களில் நீர்நிரம்பி கரைபுரண்டு வந்ததால், திருச்செந்தூர் சுற்றியுள்ள விவசாய நிலங்கள் சேதமடைந்துள்ளன. ஆவுடையார் குளம் பாசனப்பகுதியில் சுமார் 100 ஹெக்டர் விவசாய நிலங்களும், எல்லப்பநாயக்கன்குளம் பாசன பகுதியில் விளைநிலங்களும் சேதமடைந்துள்ளன. அரசு நிவாரண உதவி வழங்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.