குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குனர் சொன்ன ஷாக் நியூஸ்

x

நெல்லையில் கூட்டு குடிநீர் திட்ட பணிகளை ஆய்வு செய்த குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குனர் தக்ஷிணாமூர்த்தி, குடிநீர் சேகரிக்கப்படும் இடத்தில் இருந்து குடிநீர் குழாயில் வரும் வரை, குடிநீரின் தரம், பலக்கட்ட பரிசோதனைகள் செய்யப்பட்டு விநியோகிக்கப்படுவதாக தெரிவித்தார். கடந்த ஆண்டு மட்டும் தமிழகம் முழுவதும் 8.40 லட்சம் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு 113 பரிசோதனை மையங்கள் மூலம் பரிசோதனை செய்யப்பட்டதாக

கூறினார். 29 இடங்களில் தண்ணீரில் இரும்பு சத்து அதிகம் இருந்தது கண்டறியப்பட்டு, மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டதாக தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்