கோயில் வாசலில் துடிதுடித்து பிரிந்த இளைஞரின் உயிர் - பார்த்ததுமே அதிர்ந்து போன மக்கள்
மானூர் அடுத்த களக்குடியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். பாலிடெக்னிக் மாணவரான இவர், படித்து முடித்து விட்டு கடந்த 4 ஆண்டுகளாக போட்டித் தேர்வுகளுக்கு தயராகி வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், மடத்தூர் சாலையில் உள்ள சாஸ்தா கோயில் முன்பு, இளைஞர் கழுத்தறுக்கப்பட்ட நிலையில், சடலமாக கிடந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், இளைஞரின் உடலை கைப்பற்றி மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், இதன் பின்னணி மர்மம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story