"தேவையில்லாமல் யாரும் வெளியே வர வேண்டாம்.." - நெல்லைக்கு பறந்த அறிக்கை
அத்தியாவசிய தேவையின்றி மதியம் 3 மணி வரை பொதுமக்கள் வெளியே வர வேண்டாம் என நெல்லை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் வேண்டுகோள் விடுத்துள்ளார். வரும் நாட்களில் நெல்லை மாவட்டத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகம் இருக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி உள்ள நிலையில், குடிநீர் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்ய பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாகவும், குடிநீர் பிரச்சனைகளுக்காக கட்டுப்பாடு அறை அமைக்கப்பட்டுள்ளதாகவும் மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் அறிக்கை வெளியிட்டுள்ளார். தேவையான அளவு குடிநீர், ஓ.ஆர்.எஸ் கரைசல் பருக வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.
Next Story