நெல்லையை பரபரப்பாக்கிய வள்ளியூர் சம்பவம் - மொத்தமாக மாறிய காட்சிகள்
நெல்லை மாவட்டத்தில் கனமழை பெய்த நிலையில், வள்ளியூர் பகுதியில் உள்ள ரயில்வே தரை பாலத்தில் 4 அடிக்கு உயரத்திற்கு வெள்ளநீர் தேங்கியிருந்தது. இதனால் அப்பகுதியில் போக்வரத்து தடைபட்டு, பொதுமக்கள் அவதிக்கு ஆளாகினர். இந்த நிலையில் அரசு பேருந்து ஒன்று தரைப்பாளத்தில் தேங்கியிருந்த வெள்ளநீரில் சிக்கி தத்தளித்தது.தொடர்ந்து நெடுஞ்சாலை துறையினரும், வள்ளியூர் பஞ்சாயத்து நிர்வாகத்தினரும் இணைந்து தேங்கியிருந்த வெள்ளநீரை அகற்றினர். இதனை தொடர்ந்து ரயில்வே சுரங்கப்பாதையில் மக்கள் போக்குவரத்து மீண்டும் துவங்கியுள்ளது.
Next Story