நெல்லையில் பல்கலை, கல்லூரி வாசலில் தொடரும் அட்டகாசம் - போலீசை சீண்டும் இன்ஸ்டா ரீல்ஸ்

x

நெல்லையில் பல்கலை, கல்லூரி வாசலில் தொடரும் அட்டகாசம் - போலீசை சீண்டும் இன்ஸ்டா ரீல்ஸ்

நெல்லையில், பைக் சாகங்கள் செய்து வரும் இளைஞர்களின் அட்டகாசம் தொடர்கதையாகி வருகிறது. நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக

பேருந்து நிறுத்தத்தின் அருகிலும், அருகிலுள்ள ராணி

அண்ணா அரசு மகளிர் கலைக்கல்லூரி வாசலிலும் இரண்டு இளைஞர்கள் இருசக்கர வாகனத்தில் சாகசத்தில் ஈடுபட்டனர். இதன் வீடியோ காட்சிகளை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர். திருநெல்வேலியில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் நாங்குநேரி அருகிலும் இதே போல் பைக் சாகசத்தில் ஈடுபட்ட வீடியோ காட்சிகளை இன்ஸ்டாகிராமில் பதிவேற்றி உள்ளனர். வீலிங் சாகசங்களை தடுக்கும் விதமாக காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தும் இது தொடர்கதையாகி வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்