குத்தகை நிலத்தை மீட்பதில் ஏற்பட்ட பகை.... பல வருடம் நீடித்த பகை... உயிரை பறித்த கொடூரம்...

x

இரவு, நள்ளிரவாக பரிணமித்துக் கொண்டிருந்த நேரம் அது...

வெறிச்சேடி கிடந்த சாலையை போலீஸ் வாகனம், பூஸ்ட் காலடிகளும் நிறைத்திருந்தன.

ஆங்காங்கே கூடியிருந்த பகுதிவாசிகளிடம் போலீசார் தகவலை சேகரித்து கொண்டிருந்தனர்.

மோப்ப நாய் ராணி காலியாக கிடந்த சாலையில் அங்கும் இங்கும் ஓடி வட்டமடித்தது.

நேரம் ஆக ஆக, அந்த பகீர் செய்தி மெல்ல மெல்ல சுற்றுவட்டாரங்களுக்கு பரவ தொடங்கியிருக்கிறது.

வேலையை முடித்துவிட்டு சாப்பிட வருவதாக கூறிய மகன் நீண்டநேரமாகியும் வராததால் சந்தேகமடைந்த தந்தை கடைக்கு சென்று பார்த்த பிறகு தான் அந்த பயங்கரம் தெரியவந்திருக்கிறது.

சடலத்தை பற்றிய போலீசார் உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்து விட்டு விசாரணையை தொடங்கியிருக்கிறார்கள்.

கொல்லப்படவர் தமீம். 31 வயதாகிறது. நெல்லை மேலப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர். இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை.

வி எஸ் டி பள்ளிவாசல் அருகே ஆன்லைன் சர்வீஸ் சென்டர் வைத்து நடத்தி வந்திருக்கிறார்.

சம்பவத்தன்று, இரவு கடையில் வேலை செய்து கொண்டிருந்த தமீமை மர்ம கும்பல் ஒன்று வெட்டி கொன்று விட்டு தப்பி சென்றிருக்கிறது.

இப்படி ஒரு பயங்கரம் அரங்கேறியதுமே தமீம் குடும்பத்தினருக்கு முதலில் தோன்றிய பெயர் பேச்சிமுத்து.

நீண்ட வருடங்களாகவே தீர்கப்படாத ஒரு சொத்து பிரச்சினை பேச்சிமுத்துவோடு தமீம் குடும்பத்துக்கு இருந்திருக்கிறது. அதனால் ஏற்பட்ட பகையால் இந்த கொடூரம் நடந்திருக்கலாம் என்று இறந்தவரின் குடும்பத்தினர் சந்தேகித்தனர்.

எல்லா விவரங்களையும் பெற்றுக் கொண்ட போலீசார் உடனே பேச்சுமுத்துவை தேடிபிடித்து விசாரித்திருக்கிறார்கள். அதில் தான் அனைத்து உண்மைகளும் வெளிவந்திருக்கிறது..

பேச்சுமுத்துவின் ஊர் நெல்லை மாவட்டத்தில் உள்ள சீதக்குறிச்சி. இவருக்கு திருமணமாகி இரண்டு பிள்ளைகள் உள்ளனர். விவசாயம் செய்து வந்திருக்கிறார்.

தமீம் குடும்பத்துக்கு சொந்தமாக ஏராளமான சொத்துக்கள் உள்ளன. அதில் சீதக்குறியில் உள்ள நிலங்களும் அடக்கம். 1995 ஆம் ஆண்டு முதல் பேச்சுமுத்துவின் குடும்பத்தினர் அந்த நிலங்களை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த சூழலில் தமீம் குடும்பத்தினர் அந்த குத்தகை நிலத்தை திரும்ப பெற முயன்றிருக்கிறார்கள். ஆனால் அது சுமூகமாக முடியவில்லை. இதனால் இரண்டு குடும்பத்துக்கும் அந்த குத்தகை நிலம் தொடர்பாக பல வருடமாக பிரச்சினை இருந்து வந்திருக்கிறது.

இரண்டு மாதங்களுக்கு முன்பு கூட காவல்நிலையத்தில் வைத்து இரண்டு தரப்பும் பேசியிருக்கிறார்கள். ஆனால் எந்த முடிவும் எட்டப்படவில்லை. குத்தகை நிலத்தை எப்படியாவது மீட்டு விட வேண்டும் என்பதில் தமீம் விடாபிடியாக இருந்ததாக சொல்லப்படுகிறது. இதனால் பேச்சுமுத்துவுக்கு அவர் மீது கொலை வெறி உண்டாகியிருக்கிறது. தமீம் இல்லை என்றால் எல்லா பிரச்சினையும் தீர்ந்துவிடும் என்று அவர் நினைத்திருக்கிறார்.

சம்பவத்தன்று, தனது கூட்டாளிகளோடு தமீம் கடைக்குள் நுழைந்த பேச்சுமுத்து சரமாரியாக வெட்டி கொன்றிருப்பது விசாரணையில் தெரியவந்திருக்கிறது.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார், பேச்சுமுத்துவை கைது செய்து அவரது நண்பர்களை வலை வீசி தேடிவருகின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார், பேச்சுமுத்துவையும் அவரது ஆட்களையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.குத்தகை நிலத்தை மீட்பதில் ஏற்பட்ட பகை....

பல வருடம் நீடித்த பகை... உயிரை பறித்த கொடூரம்...


Next Story

மேலும் செய்திகள்