வேலை முடிந்து வீடு திரும்பிய மகனை தாயின் கண்முன்னே துடிதுடிக்க வெட்டி கொன்ற கும்பல் - பயங்கரம்
நெல்லை பாளையங்கோட்டையில் தாயின் கண் முன்னே மர்ம நபர்களால் இளைஞர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்.
தூத்துக்குடியைச் சேர்ந்த இசக்கி முத்து, கருத்து வேறுபாடு காரணமாக மனைவியை பிரிந்து தாயுடன் வசித்து வந்தார். தாயுடன் சேர்ந்து கட்டட வேலைக்குச் சென்று வந்த நிலையில், வேலை முடிந்து வீடு திரும்பும் வழியில், சாந்தி நகர் மணிக்கூண்டு அருகே 3 பேர் கொண்ட கும்பல் அவரை அரிவாளால் வெட்டி விட்டு தப்பிச் சென்று விட்டது. அவர் மீது சில வழக்குகள் இருப்பதால் முன்விரோதம் காரணமாக கொல்லப்பட்டாரா அல்லது குடும்ப பிரச்சனையால் கொல்லப்பட்டாரா என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Next Story