வெள்ளத்தில் சிக்கி வலியால் துடித்த கர்ப்பிணி..லோடு வேனில் செல்லும் போதே பிறந்த சிசு

x

தூத்துக்குடியில் பெய்த மழை காரணமாக மாநகர பகுதிகள் முழுவதுமாக மழை நீரில் மூழ்கி உள்ளது இந்நிலையில் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முழுவதுமாக தண்ணீரி மூழ்கி உள்ளதால் அங்கு வரக்கூடிய நோயாளிகள் பெரும் அவதியடைந்து உள்ளனர் மேலும் மருத்துவமனையில் இருந்து நோயாளிகள் வெளியவோ அல்லது உள்ளையோ செல்ல முடியாத சூழ்நிலை உள்ளது இதனால் தமிழ்நாடு பேரிடர் மீட்பு குழுவினர் அங்கு ரப்பர் படகுகள் மூலம் நோயாளிகளை மருத்துவமனையில் இருந்து உள்ளேயும் வெளியேயும் அழைத்து சென்று வருகின்றனர் இந்நிலையில் தூத்துக்குடி அருகே உள்ள முள்ளகாடு பகுதியை சார்ந்த சுந்தர்ராஜ் என்பவரது மனைவி கர்பகவள்ளி நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார் இதனால் இன்று மாலை அவருக்கு திடிரென பிரசவ வழி எடுத்து வழியால் துடித்தார் இதனை கண்ட அங்கிருந்த திருநங்கைகள் சிலர் கற்பகவல்லி-யை உடனடியாக ஒரு குட்டி யானை வாகனத்தில் அழைத்துகொண்டு வேகமாக ஊருக்குள் தேங்கி உள்ள மழை நீரை கடந்து தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு வந்தனர் அங்கு மழை நீர் குளம்போல் தேங்கி இருந்ததை கண்டு உள்ளே செல்ல முடியாமல் அவதியடைந்தனர் அப்போது கர்பகவள்ளி-க்கு வழி அதிகமாக எடுத்து குட்டியானை வாகத்தில் வைத்தே குழந்தை பிறந்தது உடனடியாக மருத்துவமனை உள்ளே இருந்து வந்த தமிழ்நாடு பேரிடர் மீட்பு குழுவினர் குட்டியானை-யில் பாதி குழந்தை வெளியே வந்த நிலையில் இருந்த கர்பகவள்ளியை மீட்டு ரப்பர் படகு மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவமனை-க்குள் அனுப்பி வைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்